/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிளஸ் 1 பொதுத்தேர்வு துவக்கம்:தமிழ் பாடத்தில் 440 மாணவர் 'ஆப்சென்ட்'

ADDED : மார் 05, 2024 01:59 AM
சேலம்;பிளஸ் 1 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில், 440 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
சேலம் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ் பாடத்திற்கான தேர்வு எழுத, 17,839 மாணவர்கள், 20,208 மாணவிகள் என மொத்தம், 38,047 பேர் தேர்வு எழுத இருந்தனர். இதில், 440 மாணவர்கள் நேற்று தமிழ் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வுகள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் வகையில் வினாத்தாள் கட்டு காப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், 18 பறக்கும் படையினர், 150 நிலையான கண்காணிப்பு குழுவினர் மற்றும் துணை அலுவலர்கள், 2,634 அறை கண்காணிப்பாளர்கள், 151 தேர்வு பணியாளர்கள் என பல்வேறு நிலைகளில், 3,600 தேர்வு பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேர்வு மையத்திற்கு மின்னணு பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையத்தை கலெக்டர் பிருந்தாதேவி, சி.இ.ஓ., கபீர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.