/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிளஸ் 1 மாணவி பலாத்காரம் வியாபாரி உள்பட மூவர் கைது
/
பிளஸ் 1 மாணவி பலாத்காரம் வியாபாரி உள்பட மூவர் கைது
பிளஸ் 1 மாணவி பலாத்காரம் வியாபாரி உள்பட மூவர் கைது
பிளஸ் 1 மாணவி பலாத்காரம் வியாபாரி உள்பட மூவர் கைது
ADDED : அக் 17, 2024 02:59 AM
சேலம்: சேலத்தில், பிளஸ் 1 மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வியாபாரி உள்பட கல்-லுாரி மாணவர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.
சேலத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த, 22 வயது வாலிபர் கடந்த ஐந்து மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த, 3ல் மாணவி பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு, வாலிப-ருடன் பைக்கில் அமர்ந்து சென்றுள்ளார். அப்போது, 22 வயது வாலிபரின் நண்பர்களான கல்லுாரி மாணவர்கள் இருவர் ஒரு பைக்கிலும், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு சென்றனர். பின்னர் அங்குள்ள லாட்ஜில் தங்கியுள்ளனர்.
மீண்டும் மாலை நேரத்தில், வழக்கம் போல வாலிபர் மாண-வியை வீட்டருகே இறக்கி விட்டு சென்றுள்ளார். இது குறித்து, மாணவியிடம் பெற்றோர் கேட்டபோது, தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர். டவுன் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்-தனர்.இன்ஸ்பெக்டர் கலைமணி விசாரணை நடத்தி, மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் காய்கறி வியாபாரி வீரமணி, 22, என்-பதும், அறையை வாடகை எடுத்து தந்தது வீரமணியின் கல்லுாரி நண்பர்கள் இருவர் என்பதும் தெரியவந்தது. மாணவியை ஏமாற்றி, அழைத்து சென்ற வீரமணி மீது போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த கல்லுாரி மாண-வர்களையும் போலீசார் கைது செய்தனர்.மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்-ளனர்.