தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/மூச்சுத்திணறலால் பிளஸ் 1 மாணவி பலி

மூச்சுத்திணறலால் பிளஸ் 1 மாணவி பலி

மூச்சுத்திணறலால் பிளஸ் 1 மாணவி பலி


ADDED : மே 11, 2026 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 03:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏற்காடு: தாரமங்கலத்தை சேர்ந்த பெருமாள் - ரேவதியின் மகள்கள் ஸ்வேதா, 16, நதியா, 15, மகன் மணி, 12. இதில் நதியா, மணி, தாரமங்கலத்தில் உள்ள தனியார் கராத்தே அகாடமியில் பயிற்சி பெறுகின்றனர். அவர்கள் உள்ளிட்ட பயிற்சி பெறுவோருக்கான வகுப்பு, நேற்று முன்தினமும், நேற்றும் ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இதற்கு நதியா, மணியுடன், அவர்க-ளது அக்காவான, பிளஸ் 1 படிக்கும் ஸ்வேதா, அவர்களது தாய் ரேவதி வந்தனர்.

நேற்று காலை, 6:00 மணிக்கு, ஸ்வேதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அங்கிருந்தவர்கள், ஸ்வேதாவை ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்-துவர் பரிசோதனையில், அவர் இறந்தது தெரியவந்தது. ஏற்காடு போலீசார், ஸ்வேதா உடலை கைப்பற்றி விசாரித்தனர்.போலீசார் கூறுகையில், 'ஸ்வேதாவுக்கு சிறு வயது முதலே இரு-தய கோளாறு பிரச்னை இருந்தது. அதற்கு சிகிச்சை பெற்று தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். ஏற்கனவே இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us