/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிளஸ் 1 மாணவியிடம் சீண்டல்? தேர்வு பணியில் ஆசிரியர் விடுவிப்பு
/
பிளஸ் 1 மாணவியிடம் சீண்டல்? தேர்வு பணியில் ஆசிரியர் விடுவிப்பு
பிளஸ் 1 மாணவியிடம் சீண்டல்? தேர்வு பணியில் ஆசிரியர் விடுவிப்பு
பிளஸ் 1 மாணவியிடம் சீண்டல்? தேர்வு பணியில் ஆசிரியர் விடுவிப்பு
ADDED : மார் 14, 2024 01:13 AM
சேலம், சங்ககிரி கல்வி மாவட்டம் இடைப்பாடி அருகே பூலாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி, பொதுத்தேர்வு மையமாக செயல்படுகிறது. அதன் கண்காணிப்பு பணியில் இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த தமிழாசிரியர் மாரிமுத்து, 41, ஈடுபட்டு வந்தார்.
கடந்த, 7ல் பிளஸ் 1 மாணவியருக்கு ஆங்கில தேர்வு நடந்தது. அதில் பங்கேற்ற மாணவியிடம், ஆசிரியர் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்தது. இதனால் மாணவியால் சரிவர தேர்வு எழுத முடியாததோடு வீட்டுக்கு சென்று அழுதுள்ளார். பெற்றோர் விசாரித்தபோது, அறை கண்காணிப்பாளர் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
உடனே தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர் கோபாலப்பாவிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர் விசாரித்த நிலையில், ஆசிரியர் தரப்பில் இருந்து மாணவிக்கு மிரட்டல் வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், முதன்மை கல்வி அலுவலர் கபீரிடம் புகார் அளித்தனர்.
முதல்கட்டமாக, அந்த ஆசிரியர் தேர்வு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பான விசாரணை, சேலம் சி.இ.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர், பறக்கும் படை, நிலையான படை அலுவலர்கள், துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரிக்கப்பட்டது. இதன் அறிக்கைப்படி, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

