/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூட்டுறவு சங்க பேச்சில் சமரசம் பா.ம.க., ஆர்ப்பாட்டம் ரத்து
/
கூட்டுறவு சங்க பேச்சில் சமரசம் பா.ம.க., ஆர்ப்பாட்டம் ரத்து
கூட்டுறவு சங்க பேச்சில் சமரசம் பா.ம.க., ஆர்ப்பாட்டம் ரத்து
கூட்டுறவு சங்க பேச்சில் சமரசம் பா.ம.க., ஆர்ப்பாட்டம் ரத்து
ADDED : டிச 13, 2024 01:44 AM
இடைப்பாடி, டிச. 13-
இடைப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், 5,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அங்கு பயிர், நகை கடன்கள் வழங்கியது, தமிழக அரசு தள்ளுபடி செய்த பயிர் கடன்களில் மோசடி உள்ளிட்ட புகார்களால், முன்னாள் தலைவர் உள்ளிட்டோர் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்
பதிந்து விசாரிக்கின்றனர்.இந்நிலையில் நகைக்கடன் வைத்தவர்களுக்கு நகைகளை திருப்பி தராதது, 4 ஆண்டுகளாக பயிர் கடன் வழங்காதது, முதலீடு தொகையை திருப்பி தராதது உள்ளிட்டவற்றை கண்டித்து, பா.ம.க.,வின், சேலம் தெற்கு மாவட்டம் சார்பில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவிருந்தது. இதனால் வெள்ளரிவெள்ளி கூட்டுறவு சங்க செயலாட்சியர் சோபன்ராஜ், நேற்று, பா.ம.க., மாவட்ட செயலர் செல்வகுமார், தலைவர் முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் பேச்சு நடத்தினார். அதில் விவசாயத்துக்கு கடன் பெற்ற நகைகளை திருப்பிக்
கொடுத்தல், முதலீடு தொகைகளை திருப்பி தருதல் உள்ளிட்ட, 3 கோரிக்கைகளை, உடனே நிறைவேற்றப்படும் என தெரிவித்தனர். இதனால் இன்று நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து
செய்யப்பட்டதாக, பா.ம.க.,வினர் தெரிவித்தனர்.

