மேற்கு தொகுதி பா.ம.க., வேட்பாளர் மாம்பழ சின்னத்துக்கு ஓட்டு சேகரிப்பு
மேற்கு தொகுதி பா.ம.க., வேட்பாளர் மாம்பழ சின்னத்துக்கு ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 18, 2026 05:35 AM

சேலம்; சேலம் மேற்கு தொகுதி, பா.ம.க., வேட்பாளர் கார்த்தி, மாநகராட்சிக்கு உட்பட்ட, 23, 25வது வார்-டுகளில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்-போது, வீதி வீதியாக சென்ற அவர், மாம்பழ சின்-னத்துக்கு ஓட்டு சேகரித்தார். தொடர்ந்து சாமிநா-தபுரம், வண்டிப்பேட்டை, துரைசாமி நகர், பள்ளப்-பட்டி கிழக்கு தெரு, ராவணேஸ்வரர் நகர், கோழிக்காடு, கோடிபள்ளம் உள்பட, 50க்கும் மேற்-பட்ட இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பெண்கள் பலர், ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்-தனர்.
தொடர்ந்து கார்த்தி பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின் பெண்க-ளுக்கு மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டத்தை, மேற்கு தொகுதி பெண்களுக்கு பெற்றுத்த-ருவேன். புது பஸ் ஸ்டாண்ட், 3 ரோடு, லீபஜார் பிரதான சாலை ஆகிய பகுதிகளில் பல ஆண்டாக சாலை இல்லாமல் உள்ளது. மக்கள் அவதிய-டைந்து வருகின்றனர். அதனால் தரமான சாலை அமைத்து தரப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்-வாறு அவர் பேசினார்.
அப்போது, அ.தி.மு.க., சூரமங்கலம் பகுதி செயலர் மாரியப்பன், மாநகராட்சி கவுன்சிலர் சசி-கலா, பா.ம.க., மாவட்ட செயலர் சரவணகந்தன், மாவட்ட அமைப்பு செயலர் சிவா, பா.ஜ., மண்டல தலைவர் கார்த்தி, மாவட்ட துணை தலைவர் ரமேஷ், அமைப்புசாரா மண்டல செயலர் பாலமு-ருகன், அம்பேத்கர் மக்கள் கட்சி தலைவர் அண்-ணாதுரை உள்ளிட்டோரும், மாம்பழ சின்னத்-துக்கு ஓட்டு கேட்டனர்.
