/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எல்.இ.டி., பல்புகள் பொருத்தியதில் ஊழல் பொதுநல வழக்கு தொடர பா.ம.க., முடிவு
/
எல்.இ.டி., பல்புகள் பொருத்தியதில் ஊழல் பொதுநல வழக்கு தொடர பா.ம.க., முடிவு
எல்.இ.டி., பல்புகள் பொருத்தியதில் ஊழல் பொதுநல வழக்கு தொடர பா.ம.க., முடிவு
எல்.இ.டி., பல்புகள் பொருத்தியதில் ஊழல் பொதுநல வழக்கு தொடர பா.ம.க., முடிவு
ADDED : டிச 04, 2024 02:05 AM
மேட்டூர், டிச. 4-
''மேட்டூரில், எல்.இ.டி., பல்புகள் பொருத்தப்பட்டதில் ஊழல் நடந்துள்ளது. இதனால் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்படும்,'' என, பா.ம.க.,வின், வக்கீல்கள் சமூகநீதி பேரவை மாநில தலைவர் பாலு தெரிவித்தார்.
மேட்டூர், இடைப்பாடி, அந்தியூர், ஓமலுார் சட்டசபை தொகுதிகளை ஆய்வு செய்வதற்கு, பா.ம.க., சார்பில், மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் வக்கீல்கள் சமூகநீதி பேரவை மாநில தலைவர் பாலு தலைமையில், மாநில இளைஞரணி செயலர் செந்தில், வேலுார் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலர் கிருஷ்ணன் உள்ளனர். இக்குழுவினர், மேட்டூர் தொகுதியில் இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து மேட்டூரில் நேற்று, பாலு கூறியதாவது:
முன் அறிவிப்பின்றி சாத்தனுார் அணை உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், கரையோர மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அணை திறக்க உத்தரவிட்டது யார்? ஏன் அறிவிப்பு வழங்காமல் திறக்கப்பட்டது. அதற்கு தமிழக அரசு விளக்கம் தர வேண்டும்.
இரு ஆண்டுக்கு முன், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது சி.டி.ஸ்கேன் இயந்திரம் வழங்க மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர். உடன் வரவழைப்பதாக கூறி இன்னமும் வரவில்லை.
மேட்டூர் நகராட்சி கம்பங்களில், எல்.இ.டி., பல்புகள் பொருத்தப்பட்டதில் ஊழல் நடந்துள்ளது. அதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில், பா.ம.க., சார்பில் பொதுநல வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், நகர செயலர் மதியழகன், தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.