ADDED : ஏப் 01, 2024 04:13 AM
அ நிறம் | அளவு
வீரபாண்டி: சேலம் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் விக்னேஷ், இரட்டை இலை சின்னத்திலும், தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, 'உதயசூரியன்' சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். பா.ஜ., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு சேலம் ஒதுக்கப்பட்டு அண்ணாதுரை, மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
வேட்பாளர்களை அறிவித்ததும், அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் உடனே சுவர்களை பிடித்து அவரவர் கட்சியின் சின்னம், வேட்பாளர் பெயர், சாதனைகளை எழுதி வைத்து ஓட்டு கேட்டு வருகின்றனர். ஆனால், பா.ம.க.,வினர், அவர்களது கூட்டணி கட்சியினர், இதுவரை அண்ணாதுரை பெயரையோ, சின்னமான, மாம்பழத்தையோ வரைந்து இடம் பிடிக்காமல் சுவர் விளம்பரத்தில் கோட்டை விட்டுள்ளனர். இதை பார்க்கும் சிலர், 'மாம்பழம்' தென்படவில்லையே என கேள்வி எழுப்புகின்றனர்.
