/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பா.ம.க., நிறுவனர் பிறந்தநாள் கொண்டாட்டம்
/
பா.ம.க., நிறுவனர் பிறந்தநாள் கொண்டாட்டம்
ADDED : ஜூலை 26, 2025 01:40 AM
அ.பட்டணம், பா.ம.க., நிறுவனர் ராமதாஸின், 87வது பிறந்த நாளை ஒட்டி, சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலில், சிறப்பு அர்ச்சனை நேற்று நடந்தது. சேலம் வடக்கு மாவட்ட செயலர் செல்வம் தலைமை வகிக்க, சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர். பின் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாவட்ட தலைவர் லட்சுமணன், ஒன்றிய செயலர்கள் மாது, அசோக்ராஜ், குமரவேல், சதீஷ்குமார், நகர செயலர் மணி உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் மேட்டூரில், சேலம் மேற்கு மாவட்ட செயலர் ராஜேந்திரன் தலைமையில், தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர், 5 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து, தேக்கு, புங்கன் உள்பட, 500 மரக்கன்றுகளை, மக்களுக்கு வழங்கினர். நகர தலைவர் மாதையன், செயலர் சுகுமார் உள்பட பலர்
பங்கேற்றனர். ஓமலுாரில், நகர செயலர் சாய்சுஜன் தலைமையில், பா.ம.க.,வினர், 'கேக்' வெட்டி கொண்டாடினர்.
இடைப்பாடி அரசு மருத்துவமனை உள்
நோயாளிகளுக்கு, சேலம் தெற்கு மாவட்ட செயலர் பச்சமுத்து, தலைவர்
தொப்பாகவுண்டர், மாவட்ட அமைப்பு தலைவர் தமிழ்செல்வன், நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார் ஆகியோர், பன், பிஸ்கட், பழங்களை வழங்கி, ராமதாஸ் பிறந்தநாளை கொண்டாடினர்.