/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பா.ம.க., ஆர்ப்பாட்டம், சாலை மறியல் 170க்கும் மேற்பட்டோர் கைது
/
பா.ம.க., ஆர்ப்பாட்டம், சாலை மறியல் 170க்கும் மேற்பட்டோர் கைது
பா.ம.க., ஆர்ப்பாட்டம், சாலை மறியல் 170க்கும் மேற்பட்டோர் கைது
பா.ம.க., ஆர்ப்பாட்டம், சாலை மறியல் 170க்கும் மேற்பட்டோர் கைது
ADDED : ஜன 03, 2025 01:17 AM
சேலம், ஜன. 3-
சென்னையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பா.ம.க., சார்பில், பசுமை தாயக மாநில தலைவி சவுமியா உள்ளிட்ட மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில், அக்கட்சி எம்.எல்.ஏ., அருள் தலைமையில், 40க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சவுமியாவை விடுவித்தல்; அடக்குமுறையை கைவிட்டு, பாதுகாப்பில் தீவிரம் காட்டுதல்; பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இதனால், அருள் உள்பட, 40 பேரையும், போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அதேபோல் ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், சேலம் கிழக்கு பா.ம.க., சார்பில், மாவட்ட செயலர் ஜெயபிரகாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், மாவட்ட தலைவர் பச்சமுத்து உள்பட, 70 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
ஓமலுாரில், பா.ம.க., - வன்னியர் சங்கம் சார்பில், மாவட்ட கவுன்சிலர் அண்ணாமலை தலைமையில் பஸ் ஸ்டாண்ட் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், போலீசார், 25 பேரை கைது செய்து, ஓமலுார் காவலர் சமுதாயக்கூடத்தில் தங்க வைத்தனர். தவிர மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமையில் பா.ம.க.,வினர், மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே, மேட்டூர் - தர்மபுரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். கொளத்துாரில் ஒன்றிய செயலர் சசிகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வாழப்பாடி பஸ் ஸ்டாண் டில், சேலம் வடக்கு மாவட்ட பா.ம.க.,வினர், சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதனால், 40க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார், தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர்.
தாரமங்கலம் நகர, ஒன்றிய பா.ம.க., சார்பில், அண்ணாசிலையில் இருந்து, கண்டன கோஷம் எழுப்பி ஊர்வலமாக பஸ் ஸ்டாண்டுக்கு வந்தனர். அங்கு, தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட வன்னியர் சங்க செயலர் கண்ணையன், பா.ம.க., மாநில செயற்குழு உறுப்பினர் பாபு, மாவட்ட செயலர் செல்வகுமார், தலைவர் முத்துசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.