sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு பிளஸ் 1 மாணவர்கள் 3 பேர் மீது 'போக்சோ'

/

7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு பிளஸ் 1 மாணவர்கள் 3 பேர் மீது 'போக்சோ'

7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு பிளஸ் 1 மாணவர்கள் 3 பேர் மீது 'போக்சோ'

7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு பிளஸ் 1 மாணவர்கள் 3 பேர் மீது 'போக்சோ'


ADDED : பிப் 13, 2025 03:22 AM

Google News

ADDED : பிப் 13, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, பிளஸ் 1 படிக்கும், 3 மாணவர்கள் மீது, 'போக்சோ' வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், 16 வயதுடைய, 3 மாணவர்கள், கடந்த ஜன., 22 மாலை, 7ம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

கடந்த, 10ல், மாண-வியின் பெற்றோர், குழந்தைகள் உதவி எண்ணில் புகார் தெரிவித்-தனர். இதுகுறித்து விசாரிக்க, சேலம் எஸ்.பி., கவுதம் கோயல், ஆத்துார் மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாண-வியின் பெற்றோர், நேற்று அளித்த புகார்படி, 16 வயதுடைய, 3 மாணவர்கள் மீது போக்சோ வழக்கு பதிந்து மகளிர் போலீசார் விசாரித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பள்ளி முடிந்து கழிப்ப-றைக்கு சென்ற மாணவியை, அதே பள்ளியில் படிக்கும், 3 மாண-வர்கள், பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். ஆசிரியர்களுக்கு தகவல் தெரிந்தும், அவர்கள் போலீசாருக்கு தகவல் அளிக்க-வில்லை. உதவி எண்ணுக்கு புகார் சென்ற பின், போக்சோ வழக்கு பதிந்து இரு மாணவர்களிடம் விசாரித்துள்ளோம்.

மற்-றொரு மாணவரை நாளை(இன்று), விசாரணைக்கு ஆஜர்படுத்த, அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளோம். விசாரணை முடிந்த பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்தில், 3 மாணவர்களும் ஒப்படைக்கப்படுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சித்தப்பா கைது

திருப்பூர், சாமுண்டிபுரத்தை சேர்ந்த, 38 வயது வாலிபர், யு - டியூப் சேனல் நடத்துகிறார். இவரது அண்ணன், சேலம் மாவட்டம் கொளத்துார், லக்கம்பட்டி அருகே வசிக்கிறார். இவ-ரது மகள், வெளியூரில் தங்கி பள்ளியில் படிக்கும் நிலையில், கடந்த மாதம், 14ல், சொந்த ஊர் வந்தார். அப்போது மாண-விக்கு, யு - டியூபர், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகு-றித்து மாணவி புகார்படி, கொளத்துார் போலீசார் விசாரித்து, நேற்று அவரது சித்தப்பாவை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்-தனர். அவர் மீது ஏற்கனவே, கள்ளக்குறிச்சி சைபர் கிரைம், மேட்-டுப்பாளையம் ஸ்டேஷனில் குற்ற வழக்குகள் உள்ளது, விசார-ணையில் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us