ADDED : ஜூன் 17, 2026 04:23 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்:ஜலகண்டாபுரத்தை
சேர்ந்த, 13 வயது சிறுமி, 9ம் வகுப்பு படிக்கிறார். கடந்த ஆண்டு
அரையாண்டு விடுமுறைக்கு, கொளத்துார் அருகே உள்ள அத்தை வீட்டுக்கு
சென்றார். அங்கு, 'டிவி' பார்த்துக்கொண்டிருந்த மாணவிக்கு, அவரது
மாமா பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
தொடர்ந்து கடந்த மாதம்,
அத்தை மகன் திருமணத்துக்கு, மாணவியின் குடும்பத்தினர் அங்கு
சென்றனர். அப்போதும் அறையில் தனியே இருந்த மாணவியிடம், மாமா மீண்டும்
பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த
புகார்படி, மேட்டூர் மகளிர் போலீசார் நேற்று, அவரது மாமா மீது,
'போக்சோ' வழக்கு பதிந்து, அவரை தேடுகின்றனர்.
