/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சமயபுரம் சுங்கச்சாவடியில் சிறுவன் மீட்பு 6 பேரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்
/
சமயபுரம் சுங்கச்சாவடியில் சிறுவன் மீட்பு 6 பேரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்
சமயபுரம் சுங்கச்சாவடியில் சிறுவன் மீட்பு 6 பேரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்
சமயபுரம் சுங்கச்சாவடியில் சிறுவன் மீட்பு 6 பேரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்
ADDED : ஏப் 30, 2025 01:03 AM
ஆத்துார்:சம்பளம் தராததால், பொக்லைன் உரிமையாளரின் புல்லட்டை, டிரைவர் எடுத்து வந்த விவகாரத்தில் சிறுவனை கடத்தியதாக புகார் எழுந்தது. இதில் சமயபுரத்தில் சிறுவனை மீட்ட போலீசார், கடத்தியதாக கூறப்பட்ட, 6 பேரை எச்சரித்து அனுப்பினர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தானை சேர்ந்தவர் நாதன், 25. திருச்சி, மருங்காபுரி, அடைக்கம்பட்டியை சேர்ந்தவர் கோபால், 26. இவரிடம், 'பொக்லைன்' வாகன டிரைவராக, நாதன் பணியாற்றினார். இரு வாரங்களுக்கு முன் கோபாலிடம், 8,000 ரூபாய் சம்பளம் கேட்டார். அவர் தராததால், கோபாலின், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'ஜாவா' புல்லட்டை எடுத்துக்கொண்டு மணி
விழுந்தான் வந்துள்ளார்.
இதனால் கோபால் உள்பட, 6 பேர், நேற்று முன்தினம் தலைவாசல் வந்து நாதனை தொடர்பு கொண்டனர். அப்போது, '17 வயது சிறுவனிடம் பணம் கொடுத்துவிட்டால், புல்லட்டை தருகிறேன்' என கூறியுள்ளார். அதன்படி சிறுவன் வந்ததும், அவனை, காரில் ஏற்றி கொண்டு சென்றனர். இரவு, 11:00 மணிக்கு, சிறுவனை கடத்திச்செல்வதாக, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமாருக்கு புகார் சென்றது. தலைவாசல், வீரகனுார் போலீசார், தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெரம்பலுார், திருச்சி மாவட்ட போலீசாருக்கு தகவல் அளித்தனர். நள்ளிரவு, 12:30 மணிக்கு, திருச்சி, சமயபுரம் சுங்கச்சாவடியில், காரில் இருந்த சிறுவனை மீட்ட போலீசார், 6 பேரையும் பிடித்து தலைவாசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார், சிறுவன், 6 பேரையும் அழைத்து வந்தனர். விசாரணையில் திருச்சி, மருங்காபுரி கோபால், 26, சுபாஷ் சந்திரபோஸ், 40, ஸ்ரீகாந்த், 19, கோபாலகிருஷ்ணன், 26, சரவணன், 30, கனகராஜ், 32, என தெரிந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சிறுவனிடம், புல்லட் குறித்து, 6 பேர் கும்பல் கேட்டபோது, ஆத்துார், காட்டுக்கோட்டை, தலைவாசல் என, இடங்களை மாற்றி மாற்றி கூறியுள்ளான். இந்நிலையில் அங்கு, நாதனின் நண்பர்கள், 10க்கும் மேற்பட்டோர் வந்ததால், சிறுவனை காரில் ஏற்றி புறப்பட்டனர். சிறுவனை கடத்தியதாக புகார் வந்ததால் விசாரித்து, சமயபுரத்தில், சிறுவனை மீட்டோம். பாதி வழியில் சிறுவனை இறங்கும்படி கூறியும், அவன் செல்லவில்லை. கடத்தவில்லை என சிறுவனும் கூறினான். இதனால் புல்லட் பறிமுதல் செய்து ஒப்படைக்கப்பட்டு, 6 பேரையும் எச்சரித்து அனுப்பினோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.