தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இரு தரப்பு மோதலால் போலீஸ் குவிப்பு

இரு தரப்பு மோதலால் போலீஸ் குவிப்பு

இரு தரப்பு மோதலால் போலீஸ் குவிப்பு


ADDED : ஆக 10, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: ஆத்துார், ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி மனைவி செல்வம், 42. நேற்று இரவு, 9:00 மணிக்கு ராமநாயக்-கன்பாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே ஊரைச்சேர்ந்த விஷ்வா, 19, என்பவர் ஓட்டி வந்த பைக், செல்வம் மீது மோதியது. அவர் தடுமாறி விழுந்-ததால் விஷ்வாவை திட்டினார்.

தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. விஷ்வா, உறவினர்க-ளுக்கு தகவல் அளித்து வரவழைத்தார். அங்கு வந்த, 20க்கும் மேற்பட்டோர், குடிநீர் குழாய்கள், வீட்டின் சுவர், சைக்கிளை சேதப்படுத்தினர்.

இதுகுறித்து தட்டிக்கேட்ட பெண்கள் சிலரை தாக்கியதாக தெரிகி-றது. இதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. காயம் அடைந்த ஒரு தரப்பை சேர்ந்த விஷ்வா, 19, உள்பட, 3 பேர், மற்றொரு தரப்பில் ஊர் தர்மகர்த்தா வெங்கடேஷ் உள்பட, 3 பேர், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தால், ஆத்துார் டவுன், ஊரக போலீசார், 20க்கும் மேற்பட்டோர், ராமநாயக்கன்பாளையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us