/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கைதியை காவலில் எடுத்து 3 பவுனை மீட்ட போலீஸ்
/
கைதியை காவலில் எடுத்து 3 பவுனை மீட்ட போலீஸ்
ADDED : அக் 15, 2025 01:23 AM
வாழப்பாடி, வாழப்பாடி, சிங்கிபுரத்தை சேர்ந்த, பாக்கு வியாபாரி முருகன், 52. இவரது மகள் சோபியாவின், திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கடந்த டிச., 8ல், சேலம், எருமாபாளையத்தில் நடந்தது. அதற்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றனர்.
மறுநாள் வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 6 பவுன் நகைகள் திருட்டு போனது தெரிந்தது. வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில், ஆத்துார், அம்மம்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன், 31, அவரது நண்பரான, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் மகேந்திரன், 37, திருடியது தெரிந்தது. இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் அயோத்தியாப்பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனுாரை சேர்ந்த, ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வெங்கடாசலம், 64, வீட்டில், அந்த இருவரும், 50 பவுன் நகைகளை திருடி, காரிப்பட்டி போலீசாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
இதை அறிந்த வாழப்பாடி போலீசார், நேற்று முன்தினம் வெங்கடேசனை, காவலில் எடுத்து விசாரித்தனர். தொடர்ந்து, முருகன் வீட்டில் திருடியதில் 3 பவுன் நகைகளை மீட்டனர்.
மீதி நகையை மீட்க, மகேந்திரனையும் காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.