ADDED : மே 02, 2024 12:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் அருகே பழமைவாய்ந்த மலை கருப்புசாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு பொங்கல் விழா நேற்று காலை குரு பூஜையுடன் துவங்கியது.
குரு ஸ்தலத்திலிருந்து சுவாமி எழுந்தருளி, மேளதாளம் வாத்தியங்களுடன் மலை கருப்புசாமி கோவிலுக்கு வந்தடைந்தது. அந்தியூர், அண்ணமார் பாளையம், தவிட்டுப்பாளையம், ஈசப்பாரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், கோவில் வளாகத்தில் ஆட்டுக்கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர்.

