ADDED : செப் 27, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், ராமநாயக்கன்பாளையத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் தேரோட்டம், 25 ஆண்டுக்கு முன் நடந்தது. பின் அந்த தேர் சிதிலம் அடைந்ததால், 10 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்டது. அதன் வெள்ளோட்ட விழா நேற்று நடந்தது.
முன்னதாக, தேரில் பூக்களால் அலங்கரித்து பூஜை செய்தனர். தொடர்ந்து தேர் மீது கலசத்தை வைத்து, பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியே இழுத்துச்சென்று கோவிலை அடைந்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.