/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஸ்டேஷனில் பூஜை இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
/
ஸ்டேஷனில் பூஜை இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
ADDED : டிச 01, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.பாளையம்:சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதிகளில் விபத்து, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்தன.
குற்ற சம்பவங்கள் நடக்காமலிருக்க, ஏத்தாப்பூர் ஸ்டேஷனில், சில நாட்களுக்கு முன் பூஜை போடப்பட்டு, அதன் வீடியோ காட்சிகள் பரவின.
இதையடுத்து, ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் குமரனை, சேலம் ஆயுதப்படைக்கு தற்காலிக இடமாற்றம் செய்து, சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் உத்தரவிட்டார்.