/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிளஸ் 2 தேர்வர் பட்டியல் வெளியீடு திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு
/
பிளஸ் 2 தேர்வர் பட்டியல் வெளியீடு திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு
பிளஸ் 2 தேர்வர் பட்டியல் வெளியீடு திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு
பிளஸ் 2 தேர்வர் பட்டியல் வெளியீடு திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு
ADDED : செப் 27, 2025 01:54 AM
சேலம், தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில், 8.20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பிளஸ் 2 படிக்கின்றனர். அவர்களுக்கு பொதுத்தேர்வு, வரும் மார்ச்சில் தொடங்க உள்ளது. அதற்கான பணியை, அரசு தேர்வுத்துறை தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் பெயர் பட்டியல், பள்ளி வாரியாக, தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கி, அதில் உள்ள மாணவ, மாணவியரின் பெயர், முன்னெழுத்து, நிரந்தர பதிவெண், பாடத்தொகுதி, பிறந்த தேதி, பெற்றோர் பெயர் உள்ளிட்ட விபரங்களை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிழை இருப்பின், அதற்கான சான்றிதழ்களுடன், அக்., 3க்குள், அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.