/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாரமங்கலத்தில் அஞ்சல் பயிற்சி மையம்
/
தாரமங்கலத்தில் அஞ்சல் பயிற்சி மையம்
ADDED : ஜூலை 29, 2024 01:07 AM
சேலம்: தாரமங்கலத்தில் அஞ்சல் பயிற்சி மைய கட்டுமான பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பார்த்திபன் அறிக்கை:
கிழக்கு கோட்ட அஞ்சலகத்தில் மாவட்டம் தழுவிய பயிற்சி மையம் செயல்படுகிறது. அங்கு கிழக்கு, மேற்கு அஞ்சல் கோட்-டத்தை சேர்ந்த அனைவருக்கும் துறை சார்ந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இரு கோட்டத்துக்கும் ஒரே அஞ்சல் பயிற்சி மையம், கிழக்கு கோட்டத்தில் உள்ளது.
இதனால் மேற்கு அஞ்சல் கோட்டத்துக்கு, தாரமங்கலம் துணை அஞ்சலகத்தில் அஞ்சல் பயிற்சி மையம் நிறுவ முடிவு செய்து அதற்கான கட்டுமான பணி நடந்து வருகிறது.
அப்பணி முடிந்து, பயிற்சி மையம் பயன்பாடுக்கு வர உள்ளது. பின் மேற்கு கோட்ட ஊழியர்கள், துறை ரீதியான செயல்பாடு, தேவையான பல்வேறு பயிற்சிகளை அங்கு பெறலாம்.