/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 11, 2024 07:16 AM
மேட்டூர் : மேட்டூர் நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளன. அதில் கிழக்கு, மேற்கு என இரு பிரதான, நெடுஞ்சாலைகள் உள்ளன. அதில் நகராட்சிக்குட்பட்ட நெடுஞ்சாலைகள் நடுவே, பாதாள சாக்கடை தொட்டி உள்ளது. அதில் அடைப்பால், தொட்டி நிரம்பி கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதை சரிசெய்ய, நெடுஞ்சாலைகளில் பாதாள சாக்கடை தொட்டி மூடிகள் ஆங்காங்கே உள்ளதால், அப்பகுதியில் சிறு பள்ளம் உருவாகிறது. தவிர, பல இடங்களில் தார்ச்சாலை அரிக்கப்பட்டு, பெரிய அளவில் பள்ளங்கள் உருவாகியுள்ளன. இப்படி, 10க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல், இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி பொறியாளர் மலர் கூறுகையில், ''நகராட்சிக்குள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.