ADDED : ஆக 12, 2026 03:48 AM

அ நிறம் | அளவு
சென்னை : சேலம் மாவட்டம் மேட்டூரில், மின் வாரியத்திற்கு அனல் மின் நிலையம் உள்ளது.
அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் நான்கு அலகுகளிலும், 600 மெகா வாட் திறனில் ஒரு அலகிலும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த மின்சாரம், சேலம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது.
மேட்டூர் மின் நிலையத்தில், 600 மெகா வாட் அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, இம்மாதம் 9ம் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், 210 மெகா வாட் திறன் உடைய மூன்றாவது அலகில், இதே பிரச்னை காரணமாக, நேற்று முன்தினம் இரவு முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
