/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விலங்கினங்களை கண்டறிய கால் தடங்களை வைத்து பயிற்சி
/
விலங்கினங்களை கண்டறிய கால் தடங்களை வைத்து பயிற்சி
ADDED : மே 22, 2025 01:34 AM
சேலம் சேலம் வனக்கோட்டம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வனம், வனவிலங்குகளை பற்றி அறிய, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மக்களுக்கு கோடை கால பயிற்சி முகாம், 5 கட்டமாக நடக்கிறது. 2ம் கட்ட முகாம் நேற்று நடந்தது.
அதில் பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சிக்கு தேவையான தொப்பி, சணல் பை, பேனா, கலர் பென்சில், செயல்பாட்டு தாள், வரைபட புத்தகம், பூங்கா சின்னம் பதித்த பேட்ஜ் வழங்கப்பட்டன. வனம், வன
விலங்குகளின் முக்கியத்துவம் பற்றி கூறப்பட்டது.
பின் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளின் உய்விடங்கள், விலங்குகளின் உணவு முறை குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து பாம்புகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களும், சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
தொடர்ந்து வண்ணத்துப்பூச்சி பூங்கா பற்றிய அறிவியல் பூர்வ தகவல், தாவரங்களின் அறிவியல் பெயர்கள், பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் விலங்கினங்களை கண்டறிய விலங்குகளின் கால்தடங்களை வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பின் பஸ் வசதியுடன், 5 கி.மீ., வனத்துக்குள் அழைத்துச்செல்லப்பட்டனர். மேலும் இணைய வசதியை பயன்படுத்தி பறவைகளின் சத்தத்தை வைத்து இனம் கண்டறியும் முறை மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. முடிவில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.