பிளஸ் 2 தேர்வில் முன்னேற்றம் 15 ஹெச்.எம்.,க்கு பாராட்டு
பிளஸ் 2 தேர்வில் முன்னேற்றம் 15 ஹெச்.எம்.,க்கு பாராட்டு
ADDED : மே 15, 2026 04:33 AM
சேலம்; தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, கடந்த, 8ல் வெளியிடப்பட்டன. இதில் சேலம் மாவட்டத்தில், 96.61 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்-றனர். குறிப்பாக அரசு பள்ளிகளில், 95.30 சதவீத தேர்ச்சி பெற்று, மாநில அளவில், 11ம் இடத்துக்கு முன்னேறியது. கடந்த கல்வி ஆண்டின் தேர்ச்-சியை விட, 10 சதவீதம் அதிகரித்துள்ள, 15 பள்ளி-களின் தலைமை ஆசிரியர்களை பாராட்டி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில், சான்றிதழை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.
அதன்படி ஜாகீர் அம்மபாளையம், மல்லுார், கன்-னங்குறிச்சி, மகுடஞ்சாவடி ஆண்கள், ஓமலுார், குள்ளப்பநாயக்கனுார், கூடமலை, தொளசம்பட்டி, சிவதாபுரம், சுக்கம்பட்டி, வி.மேட்டுப்பாளையம், டி.கோணகாபாடி, மணியனுார், முத்துநாயக்கன்-பட்டி, புதுச்சாம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி-களின் தலைமை ஆசிரியர்கள் பெற்றுக்கொண்-டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
