ADDED : செப் 18, 2026 01:37 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரயாக்ராஜ் - திருநெல்வேலி ரயில், நாளை முதல், அக்., 10 வரை, சனிதோறும் காலை, 10:20க்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி வழியே, திங்கள் மதியம், 1:15 மணிக்கு நெல்லையை அடையும். திங்கள் அதிகாலை, 4:30 மணிக்கு சேலம் வந்து செல்லும்.
மறுமார்க்க ரயில், வரும், 21 முதல், அக்., 12 வரை, திங்கள்-தோறும் இரவு, 11:30 மணிக்கு கிளம்பி, வியாழன் அதிகாலை, 3:30 மணிக்கு உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை அடையும். செவ்வாய் காலை, 6:30 மணிக்கு சேலம் வந்து செல்லும். இத்தக-வலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
