/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காதலிப்பது போல நடித்து மாணவியிடம் நகை பறிப்பு
/
காதலிப்பது போல நடித்து மாணவியிடம் நகை பறிப்பு
ADDED : செப் 03, 2025 11:52 PM
சேலம்:சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த, 17 வயது மாணவி, அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். அவருக்கு, 'இன்ஸ்டாகிராம்' மூலம், ஈரோட்டை சேர்ந்த ராகுல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது அந்த நபர், 'உன்னை பார்க்க வேண்டும்' என கூறியதால், கடந்த, 1ல் சென்னையில் இருந்து ரயில் மூலம் மாணவி ஈரோட்டிற்கு புறப்பட்டார். பின், ராகுலுடன் சேலம் வந்தார். அங்கு கழிப்பறைக்கு செல்ல அந்த மாணவி முயன்றபோது, 'இங்கு திருட்டு அதிகம் நடக்கிறது. யாராவது நகையை பறித்து விடுவர். நகைகளை கழற்றி கொடுத்து விட்டு செல்' என, அந்த மாணவியிடம் ராகுல் கூறினார்.
அதை உண்மை என நம்பிய மாணவி அணிந்திருந்த 2 தங்க வளையல், சங்கிலி உள்ளிட்ட 4 சவரன் நகைகள் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர், மொபைல் போனை, ராகுலிடம் கொடுத்துவிட்டு சென்றார். சிறிது நேரத்துக்கு பின் வந்த போது, ராகுலை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த மாணவி, ஏமாற்றப்பட்டதை பெற்றோரிடம் போன் மூலம் தெரிவித்தார்.
சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.