ADDED : மார் 18, 2026 07:01 AM
அ நிறம் | அளவு
தாரமங்கலம்,:தாரமங்கலம்
அருகே பெரியேரிப்பட்டியை சேர்ந்தவர் சின்-னப்பன், 55. அதே பகுதியில்
உள்ள அங்காளம்மன் கோவில் பூசாரியாக உள்ளார். அத்துடன், 'குறி'
சொல்லி தோஷம் கழித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு,
அவர் வீட்டில் இருந்தபோது, ஸ்கூட்டியில் இருவர் வந்தனர்.
தொடர்ந்து
தோஷம் கழிக்க வேண்டும் என கூற, சின்னப்பன் அவர்களுடன், துட்டம்பட்டி
அருகே மயானத்துக்கு சென்றார். அங்கு ஏற்கனவே இருந்த ஒருவர்,
பூசாரியுடன் வந்த இருவர் என, 3 பேர் சேர்ந்து, பூசாரியின் கை, கால்களை
கட்டிப்போட்டு தாக்கினர். பின் பூசாரி அணிந்திருந்த, 12 கிராம் தங்க
சங்கிலி, கை, காலில் அணிந்திருந்த, 350 கிராம் வெள்ளி தண்டையை பறித்து
சென்றனர். சின்னப்பன் புகார்படி தாரமங்கலம் போலீசார்
விசாரிக்கின்றனர்.
