/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆரம்ப சுகாதார நிலையம், நல்வாழ்வு மையம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் திறப்பு

ADDED : ஜூலை 04, 2025 01:25 AM
சேலம், சேலம், தாதம்பட்டி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், 7 நகர்புற நல்வாழ்வு மைய திறப்பு விழா நேற்று நடந்தது. இவற்றை, முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.தொடர்ந்து சேலத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:
மாநகராட்சியின் அம்மாபேட்டை மண்டலம், தாதம்பட்டியில், 1.20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், 1.75 கோடி ரூபாய் மதிப்பில் வக்கீல் காடு, அசோக் நகர், குமரகிரிப்பேட்டை, ஆண்டிப்பட்டி, சந்தைப்பேட்டை, சின்னமாபாளையம், கரீம் காம்பவுண்ட் பகுதிகளில் கட்டப்பட்ட நகர்புற நல்வாழ்வு மையங்களை, முதல்வர் திறந்து வைத்தார். தாதம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், அதன் சுற்றுப்பகுதிகளில், 35,000 பேர் பயன்பெறும்படி அமைக்கப்பட்டுள்ளது. உள்நோயாளிகள், புறநோயாளிகள் சிகிச்சை, மகப்பேறு, கர்ப்பிணி, குழந்தைகளுக்கு தடுப்பூசி, மக்களை தேடி மருத்துவம், தொற்று, தொற்றாநோய் உள்பட அனைத்து சேவைகளும், 24 மணி நேரமும் வழங்கப்பட உள்ளது.
மாநகராட்சியில் ஏற்கனவே, 16 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படும் நிலையில், தாதம்பட்டியுடன், 17 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே, 25 நகர்புற நல்வாழ்வு மையங்கள் உள்ள நிலையில், தற்போது, 32 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, எம்.பி., செல்வகணபதி, மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.