ADDED : ஏப் 17, 2026 02:08 AM
சேலம்: சேலம், அமானி கொண்டலாம்பட்டி, அரசமரத்துக்காட்டூரை சேர்ந்தவர் சரவணன், 62. இவருடன் கூட்டாளிகள், 9 பேர் சேர்ந்து, 2015ல் மணியனுாரில் கேரம் போர்டு விளையாடினர். அப்போது ஏற்பட்ட தகராறில் மனோஜ்குமார் என்பவரை கொலை செய்தனர். இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார், சரவணன் உள்பட, 9 பேரை கைது செய்தனர். தொடர்ந்து கடந்த, 9ல் சேலம் நீதிமன்றத்தில், சரவணன் உள்பட, 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சரவணனுக்கு கல்லீரல் பிரச்னையால், கடந்த, 10ல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நலம் தேறியதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் நேற்று மதியம் சரவணனுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்-பட, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்-துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்து-விட்டது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
