sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பரோலில் சென்ற கைதி 'எஸ்கேப்

/

பரோலில் சென்ற கைதி 'எஸ்கேப்

பரோலில் சென்ற கைதி 'எஸ்கேப்

பரோலில் சென்ற கைதி 'எஸ்கேப்


ADDED : பிப் 21, 2026 09:30 AM

Google News

ADDED : பிப் 21, 2026 09:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கோரிமேட்டை சேர்ந்தவர் சிவக்குமார், 36. இவர், 2017ல் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் வழிப்பறியில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை கைதியாக சிறையில் இருந்தார். நன்னடத்தை அடிப்படையில், 15 முறை பரோலில் சென்றிருந்தார்.

சில நாட்களுக்கு முன் மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். கடந்த, 13ல் பரோல் வழங்கி, 20ல் சிறைக்கு வர சிறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி சென்ற சிவக்குமார், நேற்று மாலை, சிறைக்கு வர வேண்டும். ஆனால் வெகுநேரமாகியும் சிவக்குமார் வராததால் சந்தேகம் அடைந்த சிறை கண்காணிப்பாளர் வினோத் விசாரித்தார். அதில் அவர் தலைமறைவானது தெரிந்தது. தொடர்ந்து வினோத் புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார், சிவக்குமாரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us