/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொலை மிரட்டல் விடுத்த கைதி உறவினர்கள் சந்திக்க 3 மாதம் தடை
/
கொலை மிரட்டல் விடுத்த கைதி உறவினர்கள் சந்திக்க 3 மாதம் தடை
கொலை மிரட்டல் விடுத்த கைதி உறவினர்கள் சந்திக்க 3 மாதம் தடை
கொலை மிரட்டல் விடுத்த கைதி உறவினர்கள் சந்திக்க 3 மாதம் தடை
ADDED : நவ 12, 2024 07:05 AM
சேலம்: சேலம், மத்திய சிறை யில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்-டனை கைதி அய்யன்துரை, 29. பிரபல ரவுடி காட்டூர் ஆனந்-தனின் கூட்டாளியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்-பறி, போக்சோ, வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்-பட்டது
நேற்று முன்தினம் கடுமையான பல் வலி ஏற்பட்டது, அப்போது சிறையில் சோதனை குழுவை சேர்ந்த வார்டன் ஒருவர், அய்யன்-துரையை கோபம் உண்டாகும் வகையில் பேசி உள்ளார். கோபம-டைந்த அய்யன்துரை, பிளேடால் கையை கிழித்து கொண்டார். பின், அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், நேற்று பல்வலி சிகிச்சைக்காக சிறை காவலர்கள், அய்யன்துரையை சேலம் அரசு மருத்துவனைக்கு அழைத்து வந்-தனர். தற்போது சிகிச்சை அளிக்க முடியாது, வரும் புதன் கிழமை சிகிச்சை அளிப்பதாக மருத்துவர் கூறியுள்ளார். நான் இங்கேயே இருக்கிறேன் என அய்யன்துரை கூறியுள்ளார். ஆனால் அய்யன்து-ரையை சிறை காவலர்கள் மத்திய சிறைக்கு அழைத்து வந்தனர். அப்போது அய்யன்துரை, சிறை காவலர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து சேலம் அரசு மருத்துவ-மனை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. இதைய-டுத்து, கைதி அய்யன்துரையை உறவினர்கள் மூன்று மாதம் சந்-திக்க தடை விதித்து, சிறை எஸ்.பி., வினோத் உத்தரவு பிறப்பித்-துள்ளார்.