ADDED : ஜன 19, 2026 08:15 AM
சேலம்: பொங்கல் பண்டிகையை ஒட்டி, சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பானை உடைத்தல், சாக்குப்பை கட்டி தாவி செல்லும் போட்டி, பலுான் உடைத்தல், வாலிபால், செஸ், கேரம் போர்டு போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
ஜெயில் சிங்கர், ஜெயில் டான்சர் போட்டிகளும் நடந்தன. 300க்கும் மேற்பட்ட கைதிகள் திறமை-களை வெளிப்படுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் மணியனுாரை சேர்ந்த விசாரணை கைதி பெரியசாமி, 'ஜெயில் சிங்கர் - 2026' பட்டத்தை தட்டிச்சென்றார். டான்சர் போட்-டியில், ஓசூர் விசாரணை கைதி ராகுல், விசாகப்-பட்டினத்தை சேர்ந்த விசாரணை கைதி நாகபூ-ஷணம் முதலிடம் பிடித்தனர்.
போட்டியில் வென்ற அனைவருக்கும், சிறை எஸ்.பி., வினோத்குமார், பரிசு வழங்கி பாராட்-டினார். சிறை அலுவலர் ராஜேந்திரன், துணை சிறை லுவலர் சிவா உள்பட பலர் பங்கேற்றனர்.
