ADDED : மே 27, 2026 04:06 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்:சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பணியாளர்கள், நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் கடைகள் மூடப்பட்டன. இதனால் ஆத்துார், நரசிங்கபுரம் பகுதிகளில் உள்ள இரு தனியார் மதுபான பார்களில், குடிமகன்கள் குவிந்தனர். தொடர்ந்து குடி
மகன்கள் இடையே மதுபானங்கள் வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால், அங்கு சென்ற ஆத்துார் டவுன் போலீசார், கூட்டத்தை கலைத்தனர். பின் அவர்கள் அறிவுறுத்தல்படி, இரவு, 7:00 மணிக்கே, இரு மதுபான பார்களும் மூடப்பட்டன.
