ADDED : செப் 24, 2026 01:24 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: அனைத்து அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்-டத்தை கண்டித்து, சேலம் கிழக்கு மாவட்ட தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் நலச்சங்கம் சார்பில், ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள அண்ணாதுரை சிலை முன், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்து பேசியதா-வது:
ஏற்கனவே இலவச பயண திட்டத்தால், தனியார் பஸ்களில் வருவாய் பாதியாக குறைந்துவிட்டது. தற்போது இதை விரி-வாக்கம் செய்து, அனைத்து அரசு பஸ்களில் பெண்களுக்கு இல-வசம் என்ற அறிவிப்பால், எங்கள் வாழ்வா-தாரம் பாதிக்கப்பட்-டுள்ளது. மேலும் தனியார் பஸ் வருவாய் பாதிப்பை காரணம் காட்டி, இயக்குவதை நிறுத்தினால் பலர் வேலை இழக்கும் நிலை ஏற்படும். இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
