தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தனியார் பஸ் சிறைபிடிப்பு

தனியார் பஸ் சிறைபிடிப்பு

தனியார் பஸ் சிறைபிடிப்பு


ADDED : ஆக 31, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்:சேலத்தில் இருந்து ஓமலுார், பூசாரிப்பட்டி வழியில் தர்மபுரி செல்லும் அரசு, தனியார் பஸ்கள், பூசாரிப்பட்டி மேம்பால பகுதியில் பயணியரை இறக்கி விடாமல், தீவட்டிப்பட்டியில் இறக்கி விடுகின்றனர்.

அப்பகுதி மக்கள், அங்கிருந்து வேறு பஸ் பிடித்து பூசாரிப்பட்டிக்கு வருகின்றனர். இதனால் தினமும் பூசாரிப்பட்டி மக்கள், கல்லுாரி, பள்ளி மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை போராட்டங்களும் நடத்தியுள்ளனர்.

தற்போது மீண்டும் பஸ்கள் அனைத்தும் பாலத்திலேயே செல்கின்றன. இதை கண்டித்து, நேற்று அப்பகுதியை சேர்ந்த செல்வம் தலைமையில் மக்கள், தனியார் பஸ்களை சிறைபிடித்தனர். அப்போது, 'சர்வீஸ் சாலை வழியே பஸ்கள் செல்ல வேண்டும். பயணியரை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்' எனக்கூறி

எச்சரித்து, பஸ்களை விடுவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us