/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தனியார் நிறுவன ஊழியர் ரூ.5 லட்சத்துடன் மாயம்
/
தனியார் நிறுவன ஊழியர் ரூ.5 லட்சத்துடன் மாயம்
ADDED : நவ 07, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், கருப்பூர், அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபா-கரன், 45. அதே பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்துகிறார். அங்கு திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த விக்னேஷ், 'கலெக் ஷன்' பணிக்கு, சமீபத்தில் சேர்ந்தார்.
கடந்த அக்., 26 இரவு, நிதி நிறுவனத்தில் இருந்த, 5 லட்சம் ரூபாயை காண-வில்லை. இதுகுறித்து பிரபாகரன், அலுவலகத்தில் விசாரித்த-போது, விக்னேஷ் பணத்துடன் மாயமானது தெரிந்தது. இதனால் அவர், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.