/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாவட்ட சதுரங்க போட்டியில் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு
/
மாவட்ட சதுரங்க போட்டியில் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு
மாவட்ட சதுரங்க போட்டியில் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு
மாவட்ட சதுரங்க போட்டியில் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு
ADDED : டிச 30, 2024 02:42 AM
சேலம்: துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, சேலத்தில் மத்-திய மாவட்ட தி.மு.க., மாநகர் மாணவரணி சார்பில், மாவட்ட சதுரங்க போட்டி நேற்று நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். 12, 16, 25 வயதுக்கு உட்பட்டோர் என, 3 பிரிவாக நடந்த போட்டிகளில், 250க்கும் மேற்பட்ட வீரர், வீராங்-கனைகள், திறமையை வெளிப்படுத்தினர்.
இதில், 12 வயது பெண்கள் பிரிவில் பவிக்காஸ்ரீ, ஷாரிகா, அம்-ருதா; ஆண்கள் பிரிவில், அர்ஜூன், மிர்துன், சைலேஸ் ஆகியோர் முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அதேபோல், 16 வயது பெண்கள் பிரிவில் சமருத்தா, பிரியதர்-ஷினி, யோகபிரியா; ஆண்கள் பிரிவில் பைசல் சல்மான், வருண் வீரக்குமார், மெர்வின்; 25 வயது பெண்கள் பிரிவில் பிரியதர்-ஷினி, பிரியதர்ஷினி பேபி, ஆர்த்தி; ஆண்கள் பிரிவில் தணிகை-வேலன், ரோசன், பிரதீப்ராஜ் ஆகியோர் முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
அவர்களுக்கு, சேலம் மாவட்ட சதுரங்க கழக தலைவர் பாலகி-ருஷ்ணன், மேயர் ராமச்சந்திரன் பரிசுகள் வழங்கினர். மாநகர் மாணவரணி பொறுப்பாளர் மணிகண்டன், துணை அமைப்பா-ளர்கள் சுந்தர், இந்துஜா உள்ளிட்டோர், 'டேலண்ட் செஸ்' அகாட-மியுடன் இணைந்து போட்டியை ஒருங்கிணைத்து நடத்தினர்.
ஈகிள் கிரிக்கெட் கிளப்
துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, சங்ககிரி பேரூர் தி.மு.க., சார்பில், கிரிக்கெட் போட்டி நடந்தது. 32 அணிகள் மோதின. அதில் ஐயங்காட்டூர் ஈகிள் கிரிக்கெட் கிளப் 'ஏ' அணி, சங்ககிரி டைட்டன்ஸ் கிரிக்கெட் கிளப், சங்ககிரி சிட்-டிசன் கிரிக்கெட் கிளப், ஈகிள் கிரிக்கெட் கிளப் பி அணி, சங்க-கிரி கிட்மேன் கிரிக்கெட் கிளப் முறையே, முதல், 5 இடங்களை பிடித்தன. அந்த அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா சங்ககிரியில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். அதில் சேலம் எம்.பி., செல்வகணபதி, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
வழங்கினார்.
மாவட்ட துணை செயலர்கள் சுந்தரம், சம்பத்குமார், பேரூர் செயலர் முருகன், சங்ககிரி லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் கந்-தசாமி, டவுன் பஞ்சாயத்து தலைவி மணிமொழி உள்பட பலர் பங்கேற்றனர்.