/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
. 'முறையான உணவு பழக்க வழக்கம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்'
/
. 'முறையான உணவு பழக்க வழக்கம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்'
. 'முறையான உணவு பழக்க வழக்கம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்'
. 'முறையான உணவு பழக்க வழக்கம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்'
ADDED : நவ 14, 2024 07:43 AM
சேலம்: உலக நீரிழிவு தினத்தையொட்டி சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய், அதன் விளைவுகள் பற்றிய கருத்தரங்கம் நேற்று நடந்தது. நீரிழிவு நோய் துறை தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார்.
டீன் தேவிமீனாள், மருத்துவமனை சுகாதார பணியாளர்களுக்கான சர்க்கரை நோய் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது: சர்க்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை தொடர்புடைய குறைபாடு. உயரத்துக்கு ஏற்ப எடை, முறையான உணவு பழக்க வழக்கம், போதிய உடற்பயிற்சி செய்தால் நோய் வராமல் தடுப்பதோடு கட்டுப்படுத்தவும் முடியும்.தற்போது கர்ப்ப காலங்களில் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகம் உள்ளதால், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்த கருத்தரங்கம். கர்ப்ப காலங்களில், சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால்
அதன் நோய் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு கால் ரத்தக்குழாய் பாதிப்பு கண்டறிதல், கால் புண் சிகிச்சை, பாத பராமரிப்பு ஆலோசனை, இருதய தன்னியக்க நரம்பு பாதிப்பு கண்டறிதல்
போன்ற சிகிச்சைகள் அரசு மருத்துவமனையில் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

