தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரவுடிகளுக்கு 'காப்பு'

ரவுடிகளுக்கு 'காப்பு'

ரவுடிகளுக்கு 'காப்பு'


ADDED : நவ 22, 2026 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2026 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: ஓமலுார் அடுத்த சிந்தாமணியூர், தேவாங்க செட்டியார் கல்யாண மண்டப தெருவை சேர்ந்தவர் சண்முகம், 34. சேலம், சீலநாயக்கன்பட்டியில் உள்ள பேக்கரியில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு பணி முடிந்து வீட்டுக்கு செல்ல அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே நின்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த, 2,350 ரூபாயை பறித்துக்கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றார். சண்முகம் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது சேலம், தாதகாப்பட்டி, சீரங்கன், 5வது குறுக்கு தெருவை சேர்ந்த ரவுடி கார்த்திக், 31, என தெரிந்தது. நேற்று, அவரை போலீசார் கைது செய்தனர்.சேலம், பெரிய புதுார், நகரமலை அடிவாரம் சாலையை சேர்ந்த, எலக்ட்ரீஷியன் சிலம்பரசன், 26. இவர் அதே பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு வீட்டுக்கு நடந்து சென்றபோது, ஒருவர் வழிமறித்து, கத்தியை காட்டி அவரிடம் இருந்த, 1,500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பிவிட்டார். எலக்ட்ரீஷியன் புகார்படி, அழகாபுரம் போலீசார் விசாரித்து, அதே பகுதியில் உள்ள ஒடசக்கரையை சேர்ந்த ரவுடி அருண்குமார், 24, என்பவரை நேற்று கைது செய்தனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us