தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பட்டு நுாற்பக முறைகேடு களையக்கோரி ஆர்ப்பாட்டம்

பட்டு நுாற்பக முறைகேடு களையக்கோரி ஆர்ப்பாட்டம்

பட்டு நுாற்பக முறைகேடு களையக்கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 21, 2026 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 12:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில சிறப்பு தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். தமிழ்-நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் பேசினார்.முறைகேடுகளுக்கு துணை போகாத தொழிலாளர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிடுதல்; சேலம் உதவி இயக்-குனர் கட்டுப்பாடில் இயங்கும் அரசு பட்டு நுாற்பகத்தில் நடக்கும் முறைகேடுகளை களைதல்; பட்டு நுற்பகத்தில் தொடர்ந்து ஊழல், முறைகேடு செய்தும், 9 ஆண்டாக ஒரே இடத்தில் பணி-யாற்றும் இளநிலை பட்டு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்தல்; தனி நபர்களிடம் கையூட்டு பெற்று, பணி நியமனம் செய்வதை தவிர்த்தல் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியு-றுத்தினர். தலைவர் சாதிக் பாஷா, பொதுச்செயலர் ரஹ்மத்துல்லா, சட்ட ஆலோசகர்கள் கிருஷ்ணன், ராஜலிங்கம் உள்பட பலர் பங்-கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us