/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கன்னியாஸ்திரிகளுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்
/
கன்னியாஸ்திரிகளுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 04, 2025 08:22 AM
சேலம்: சத்தீஸ்கரில், ஜாமினில் விடுவிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகளுக்கு நீதி கேட்டு, சேலம், 4 ரோடு குழந்தை இயேசு பேராலய நுழைவாயில் பகுதியில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பங்குத்தந்தை ஜெய் பெர்னார்ட் ஜோசப் தலைமை வகித்தார்.
கன்னியாஸ்திரிகள் கைதை கண்டித்து, சகோதரி ஆனிஜாய்ஸ், லியோபால் பேசினர். தொடர்ந்து சிறுபான்மையினரை மதிக்கவும், அடக்குமுறையை கண்டித்தும், நீதி கேட்டும் முழக்கமிட்டனர்.
பின் ஜெய் பெர்னார்ட் ஜோசப் பேசுகையில், ''கடந்த ஜூலை 26ல், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பணி செய்த கன்னியாஸ்திரிகள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தது அனைவரையும் பாதித்துள்ளது. அதனால் நடந்த போராட்டம் வலுத்ததால் அவர்களுக்கு ஜாமின் கிடைத்துள்ளது.
இந்த வழக்கில் விடுதலை கேட்டு, தற்போது நீதி வழி போராட்டம் நடக்கிறது. பொய் வழக்கு போட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.முன்னதாக, பேராலய பகுதி யில் இருந்து மறைமக்கள், சகோதரிகள் மெழுகுவர்த்தி ஏந்தி, பவனி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிறைவாக சிறப்பு ஜெபத்துடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது. அதேபோல் ஏற்காட்டில், மனித நேய பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் கண்டன ஊர்வலம் நடந்தது. கிறிஸ்தவ சபை பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.