நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: இடைப்பாடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், சாலை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், கோட்ட செயலாளர் கலைவாணன் அந்தோணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில் வேலை வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.