ADDED : ஆக 26, 2026 05:33 AM
ஓமலுார்; ஓமலுார் ஒன்றியம், எம்.செட்டிப்பட்டி கிரா-மத்தில் மொட்டையன் தெரு, தெற்கத்தி தெரு, எம்.செட்டிப்பட்டி பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்-ளன. இப்பகுதியில் முறையாக குடிநீர் வினியோ-கிப்பது கிடையாது எனவும், பல முறை ஊராட்சி செயலரிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் நடவ-டிக்கை எடுக்கவில்லை என மக்கள்
குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை, 9:30 மணிக்கு, 100க்கும் மேற்பட்டோர் தாரமங்கலம் - ஓமலுார் செல்லும் நான்கு ரோட்டில், காலி குடங்களை வைத்து, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொளசம்-பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஓமலுார் ஒன்றிய அதிகாரிகள் வந்தால் தான் கலைந்து செல்வோம் என, மக்கள் தெரி-வித்தனர்.பின்னர் வந்த ஓமலுார் பி.டி.ஓ., உமாசங்ககர், 'முறையாக தண்ணீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குடிநீர் குழாயை உடைப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். அதன் பின்வர், 10:00 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.
