/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி சேலத்தில் காத்திருப்பு போராட்டம்
/
டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி சேலத்தில் காத்திருப்பு போராட்டம்
டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி சேலத்தில் காத்திருப்பு போராட்டம்
டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி சேலத்தில் காத்திருப்பு போராட்டம்
ADDED : அக் 06, 2025 04:36 AM
சேலம்: சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டம் நடந்தது.
சேலம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழ்நாடு பாலர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், புது பஸ் ஸ்டாண்ட் மெய்யனுார் பஸ் டிப்போ அருகே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாநகர செயலர் பிரவீன் குமார் தலைமையில், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தமிழக அரசை கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை குறைக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து பிரவீன் குமார் கூறுகையில்,'' சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மெய்யனுார் செல்லும் சாலையில், 200 மீட்டர் தொலைவுக்குள், 5 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு குடிமகன்கள் மது அருந்திவிட்டு, சாலையில் படுத்து கொண்டு ரகளையில் ஈடுபடுகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை இல்லாததால் கடந்த இரு முறை போராட்டம் நடத்தினோம். அதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் மே 1ல், கடையை குறைப்பதாக வாக்குறுதி அளித்தனர். 6 மாதங்களாகியும் கடையை குறைக்காமல் உள்ளனர். கடையை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், விரைவில் 5 கடைகளுக்கும் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.
சேலம் மேற்கு தாசில்தார் மனோகரன், துணை கமிஷனர், ரமாலட்சுமி, இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இன்று கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தி, கடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின் அவர்கள் கலைந்து சென்றனர்.