/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வி.சி.,ஒன்றிய செயலர் மரக்கன்று நட்டதால் எதிர்ப்பு
/
வி.சி.,ஒன்றிய செயலர் மரக்கன்று நட்டதால் எதிர்ப்பு
ADDED : நவ 19, 2024 01:40 AM
வி.சி.,ஒன்றிய செயலர்
மரக்கன்று நட்டதால் எதிர்ப்பு
கெங்கவல்லி, நவ. 19-
கெங்கவல்லி அருகே, கூடமலை கிராமத்தில், 95 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு கரடு உள்ளது. இதில், 1.30 ஏக்கர் நிலத்து பட்டா உள்ளதாக நேற்று, கெங்கவல்லி வி.சி., ஒன்றிய செயலர் செல்வகுமார் உள்ளிட்டோர், 100க்கும் மேற்பட்ட தென்னை மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள், அரசு இடத்தில் மரக்கன்று நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்த கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையிலான வருவாய்த்துறை மற்றும் போலீசார், மரக்கன்று நடும் பணிகளை தடுத்து நிறுத்தினர். இடம் தொடர்பாக ஆவணங்கள் ஆய்வு செய்த பின், பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, வருவாய்த்துறையினர் எச்சரிக்கை செய்தனர்.

