/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.1.50 லட்சத்தில் கல்விச்சீர் துவக்கப்பள்ளிக்கு வழங்கல்
/
ரூ.1.50 லட்சத்தில் கல்விச்சீர் துவக்கப்பள்ளிக்கு வழங்கல்
ரூ.1.50 லட்சத்தில் கல்விச்சீர் துவக்கப்பள்ளிக்கு வழங்கல்
ரூ.1.50 லட்சத்தில் கல்விச்சீர் துவக்கப்பள்ளிக்கு வழங்கல்
ADDED : ஆக 16, 2024 05:36 AM
ஓமலுார்: ஓமலுார், பல்பாக்கியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, முன்னாள் மாணவர்கள், பெற்றோர், கிராம மக்கள் இணைந்து கல்விச்சீர் வழங்கும் விழா நேற்று நடந்தது.
அதில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 2 ஸ்மார்ட் டிவி, 25 சேர், ஆர்.ஓ., மிஷின், மைக் செட், எடை இயந்திரம், உயரம் பார்க்கும் கருவி, நோட்டு, பேனா, பென்சில்கள், 'ஏ4' சீட்டுகள், மூலிகை செடிகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. முன்னதாக ஓமலுார் - தர்மபுரி சாலையில் இருந்து மேள தாளம் முழங்க, முன்னாள் மாணவர்கள், மக்கள் சீர்வர்சை பொருட்களை சுமந்து ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்து கொடுத்தனர். இதில் வட்டார கல்வி அலுவலர் சுரேஷ், வட்டார வள மேற்பார்வையாளர் தனுஜா, தலைமை ஆசிரியர் சசிகலா பங்கேற்றனர்.