தேர்தல் புகார் மீது நடவடிக்கை பொது பார்வையாளர் அறிவுரை
தேர்தல் புகார் மீது நடவடிக்கை பொது பார்வையாளர் அறிவுரை
ADDED : மார் 20, 2026 04:41 AM
சேலம்:சேலம் மேற்கு தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு குறித்து, தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர் விஜய்சிங் ஜடேஜா, செலவின பார்வையாளர் கவுதம் குமார், நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து மேற்கு தாலுக்கா அலுவல-கத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தொகுதி தேர்தல் அலு-வலர் ஜானகி முன்னிலை வகித்தார். அதில் விஜய்சிங் ஜடேஜா, கவுதம்குமார், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
குறிப்பாக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடு-களை தயாராக வைத்திருத்தல்; மனு தாக்கலுக்கு வரும் வேட்பா-ளர்கள், கட்சியினர், சரியான விதிமுறைகளை பின்பற்றுதல்; 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உரிய பணியாளர்கள் இருத்தல்; மக்களிடம் இருந்து வரும் தேர்தல் தொடர்பான புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்தல்; பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு சோதனைகளை கண்-காணித்தல்; டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைத்து, தேர்தல் நேரத்தில் பயன்படுத்துவதை தடுக்க முன்னேற்பாடு நடவடிக்கை-யாக டாஸ்மாக் அதிகாரிகள், சூப்பர்வைசர்களுடன் தனி ஆய்வு கூட்டத்தை நடத்தல் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன. தேர்தல் அலுவலர்கள் ஏகராஜ், மனோகரன் உள்ளிட்ட அலுவ-லர்கள் பங்கேற்றனர்.ஓட்டுச்சாவடி மையங்கள் ஆய்வு
இடைப்பாடி, சங்ககிரி சட்டசபை தொகுதிகளின் தேர்தல் பொது பார்வையாளர் ஹனுமந்த் கொண்டியா ஜெண்டாகே, நேற்று இடைப்பாடி தொகுதியில் உள்ள ஆலச்சம்பாளையம், கல்-லபாளையம், வெள்ளரிவெள்ளி, கோனேரிப்பட்டி ஆகிய இடங்-களில், அரசு பள்ளிகளில் அமைக்கப்படும் ஓட்டுச்சாவடி மையங்-களை பார்வையிட்டார். சங்க கிரி தொகுதியில் பொன்னம்பா-ளையம் அரசு நடுநிலை, அரசிராமணி செட்டிப்பட்டி அரசு மேல்-நிலை, கல்லம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்-ளிகளில் அமைக்கப்பட உள்ள ஓட்டுச்சாவடிகளை பார்வை-யிட்டார்.
அப்போது வாக்காளர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதி, மாற்றுத்-திறனாளி, முதியோர் செல்லும் சாய்வுதள வசதிகளை பார்வை-யிட்டார். சங்ககிரி தொகுதி உதவி தேர்தல் அலுவலர் கோமதி உள்-ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
