sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புரட்டாசி 3வது சனி சவுந்தரராஜர் கோவிலில் தேரோட்டம்

/

புரட்டாசி 3வது சனி சவுந்தரராஜர் கோவிலில் தேரோட்டம்

புரட்டாசி 3வது சனி சவுந்தரராஜர் கோவிலில் தேரோட்டம்

புரட்டாசி 3வது சனி சவுந்தரராஜர் கோவிலில் தேரோட்டம்


ADDED : அக் 06, 2024 03:51 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: புரட்டாசி, 3ம் சனியையொட்டி, சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜர் கோவிலில் நேற்று மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜர், உற்சவர் திருமேனிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. மூலவருக்கு தங்க கவசம் சார்த்தி பூஜை நடத்தப்பட்டது.

தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் சவுந்தரராஜர், சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளச்செய்தனர். இதில் ஏராளமான பெண்கள், 'கோவிந்தா' கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியே இழுத்துச்சென்றனர்.

திருக்கோடி தீபம்மாலை திருக்கோடி தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு சவுந்தரவல்லி தாயாரை, பெருமாளுடன் ஊஞ்சலில் எழுந்தருளச்செய்து, 'ஏகாந்த சேவை'யில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். திரளான பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி பெருமாளை தரிசித்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கட்டளை உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.

அதேபோல் பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் மூலவர் அனுமனுக்கு சிறப்பு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலை திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அனுமந்த வாகனத்தில் பெருமாள் வீதிஉலா நடந்தது.

மேலும் பட்டைக்கோவில் முதல் காளியம்மன் கோவில் வரை, பல்வேறு வீதிகளில் பெருமாள் நண்பர்கள் குழுக்கள் சார்பில் அலர்மேல் மங்கை தாயார் சமேத திருமலை திருப்பதி அலங்காரம் செய்து பக்தர்கள் தரிசனத்துக்காக வைத்திருந்தனர்.

திருமஞ்சனம்

ஆட்டையாம்பட்டி வேலநத்தம் பாவடி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத லட்சுமி நாராயணருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பலவித பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.

தொடர்ந்து கொடி மரத்தின் முன் உள்ள கல்மரத்தில் திருக்கோடி ஏற்றப்பட்டது. கோவில் வளாகத்தில் தனி சன்னதியில் உள்ள பக்த ஆஞ்சநேயர், சிறப்பு வெண்ணெய்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

ஆத்துார், கோட்டை பெருமாள் கோவிலில் மூலவர் பூதேவி, ஸ்ரீதேவி சமேத பெருமாள் சுவாமிக்கு பல்வேறு அபி ேஷக பூஜை செய்யப்பட்டது.

இடைப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் பூதேவி, ஸ்ரீதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது.

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகே உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தாரமங்கலம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள முத்துகுமாரசுவாமிக்கு, திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டது.

20,000 பக்தர்கள் தரிசனம்

காடையாம்பட்டி காருவள்ளி சின்னதிருப்பதி வெங்கட்ரமணர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் கோவில் பிரகாரத்தை சுற்றி சுவாமி திருவீதி உலா நடந்தது. அங்கு, 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனுார் ஊராட்சி மங்கமலை பெருமாள் கோவில் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

அதேபோல் பெத்தநாயக்கன்பாளையம் கொப்புக்கொண்ட பெருமாள், ஆறகளூர் கரிவரதராஜர் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிேஷகம், அலங்காரத்துடன் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us