/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விவசாய நிலத்தில் மலைப்பாம்பு பிடிப்பு
/
விவசாய நிலத்தில் மலைப்பாம்பு பிடிப்பு
ADDED : ஜூலை 16, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், கீரிப்பட்டி, மேல்தொம்பையை சேர்ந்த, விவசாயி செந்தில்குமார், 45. இவரது நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். அதில் விவசாய பணியில் நேற்று காலை ஈடுபட்டிருந்தார்.
அப்போது பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், 10:00 மணிக்கு ஆத்துார் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். அரை மணி நேரத்தில் அங்கு வந்த வீரர்கள், 6 அடி நீள மலைப்பாம்பை பிடித்து, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.