ADDED : அக் 24, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்றம்பள்ளி, பண்ணையில் கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது.
திருப்பத்துார் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம், 40; கோழிப்பண்ணை வைத்துள்ளார். நேற்று காலை பண்ணையில் கோழிகளின் அதிக சத்தத்தை கேட்டு சென்று பார்த்தார். ஒரு மலைப்பாம்பு கோழியை விழுங்கியதில் மயங்கிய நிலையில் கிடந்தது. தகவலின்படி நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் சென்றனர். 12 அடி நீள மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

